பொய்யான பகுத்தறிவு

       இப்போ நான் பகுத்தறிவுவாதி   போராளின்னு சொல்லி கொள்வது  ஃபேஷனா போச்சு...

சரி பகுத்தறிவு அப்படின்னா என்ன? ஒரு விசயத்தில் நன்மை தீமை அல்லது உயர்வு தாழ்வு போன்ற அதன் தன்மைகளை சீர்தூக்கி எல்லாவற்றையும் பகுத்து ஆராய்ந்து தெளியும் அறிவுதான் பகுத்தறிவு... அதில் தெளிந்தவற்றில் எது சரியானதோ அதை பின் பற்றுகிறவர்தான் பகுத்தறிவுவாதி..

        சரி, இப்போதைய பகுத்தறிவுவாதிகள் தங்களின் கொள்கை எதுவென்று சொல்கிறார்கள என்ன செய்கிறார்கள்ன்னு கொஞ்சம் யோசிப்போம்:

1) நாத்திகம் அல்லது இறைமறுப்பு.
2) சமுதாய வேற்றுமைகளை களைவது அதாவது ஜாதிகள் இல்லாமல் செய்வது,
3) பெண்களின் சமத்துவம்

    இந்த மாதிரியான கொள்கைகளை முதலில் யாருடைய சிந்தனையிலிருந்து வந்தது?

தன்னை பகுத்தறிவுவாதியாக நினைத்து கொண்டு இருப்பவர்கள் சொல்கிறார்கள்.. ஈவெ ராமசாமிதான் பகுத்தறிவின் முன்னோடி நாங்கெல்லாம் பெரியாரிஸ்ட்டுகள் என்றும் சொல்லிகொண்டு இருக்கிறார்கள். அவரால்தான் நாம் இந்த நிலைமைக்காவது வந்திருக்கிறோம் என்கிறார்கள். இது உண்மையானதுதானா? சரிதானா?

     ஆனால், உண்மையிலேயே இந்த சித்தாந்தத்தின் முன்னோடிகள் யார்? ஈவெராவுக்கு முன் பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உண்மையான ஆன்மீகவாதிகளான சிவவாக்கியரும், அய்யா வைகுண்டர், நாராயணகுரு போன்ற மனித மாமேதைகள்தான்  இன்று தெய்வங்களாகவும் கடவுளின் அவதாரமாகவும் மக்களால் வணங்கப்பட்டு வருகிறவர்கள்தான். மக்களுக்கான அத்தனை விழிப்புணர்வுகளையும் சிந்தனைகளையும் தூண்டியவர்கள்  எல்லாம் உண்மையான ஆன்மீகவாதிகளே..

 வரலாறு தெரிந்த எந்த பெரியாரிஸ்ட்டாவது மறுக்க முடியுமா?

          அப்படியானால், சிலர் ஈவெராவை கொண்டாடுகிறார்களே ஏன்? அவர் என்னதான் செய்தார்?

1) நாத்திகம் அல்லது இறை மறுப்பு :

இறைமறுப்புன்னா என்ன? அதாவது உலகில் அனேக மதங்கள் உள்ளன. அவைகள் யாவுமே கடவுள்ன்னு ஒருவர் உண்டு, அவரே நம்மை எல்லாம் வழி நடத்துகிறார் என்று சொல்கின்றன். கடவுளின் பெயர்கள் பலவாக சொன்னாலும் இறைவன் ஒருவனே என்பதை ஒத்து கொள்கின்றன. அப்படியிருக்க,  இறைமறுப்பு நாத்திகம் என்கிற பெயரில் இந்துமதத்தவரை மட்டுமே குற்றம் சாட்டும் வேலையை செய்தார். இந்துமத எதிர்ப்பை மட்டுமே வளர்த்தார். இறைமறுப்பு என்றால் என்ன? செய்திருக்க வேண்டும் இறைவன் இல்லை என்பவர் இறைவன் இல்லவே இல்லை எல்லா மதங்களும் சொல்வது பொய் என்று  சொல்லியிருக்க வேண்டுமல்லாவா? அதுதானே சரியானதாக இருக்கும்.. நியாமானதும் கூட.. அதை விடுத்து இந்துமதத்தை மட்டுமே குற்றம்சாட்ட காரணம் என்ன?

  மேலும், இறைவன் அல்லது கடவுளை கற்ப்பித்தவன் முட்டாள் என்கிறார்...

ஒருவருக்கு ஒன்று தெரியவில்லை அல்லது அது பற்றி அவர் அறியவில்லை என்றால் அது இல்லையா? அல்லது அவருக்கு புரியவில்லையா? இதில் எது?  சரி..  அது இருக்கலாம்தானே.. அது இருக்கும் வாய்ப்பு இருக்கத்தானே செய்கிறது. உதாரணமா, நியூட்ரான்கள் ஒரு சதுர சென்டி மீட்டருக்குள் சுமார் ஒரு லட்சம் கோடி  ஒரு வினாடியில் கடந்து சொல்வதாக சொல்கிறார்கள். இது நம்பும்படியாக இருக்கிறதா? என்றால் என் போன்றவர்களுக்கு நம்பும்படியாக இல்லை.. ஆனால் அதை விஞ்ஞானிகள் உண்மை என்றும் அதன் சக்திகளை பயண்படுத்த முடியும்ன்னும் சொல்கிறார்கள் பயண்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால், நமக்கு அதை நாம் காண் முடியவில்லை அப்போ நாம் இதை நம்புவதா? அல்லது இல்லை என்று சொல்வதா? நம்ப மனமில்லையானால் அதை எப்படி காண்பது.. அது எப்படி? இருக்கிறது என்று அறிந்தவர்களை கேட்டு நீங்கள் அதை எப்படி? பார்க்கிறீர்கள் அது எப்படி இருக்கிறதுன்னு அவர்களை கேட்டு தெரிந்து கொள்வதுதானே சரி, அதை விட்டுவிட்டு அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பது சரியானதா? முட்டாள்தனமானதா?

     அதுபோல்தான் ஈவேராவின் செயல், கடவுளை, நம்மை போன்ற ஒரு உருவமாக கற்பனை செய்து கொண்டு அது ஏதோ மேல்மாடியில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டும், அவர்களாகவே கடவுள் பற்றி ஒரு முடிவை வைத்துக்கொண்டு அது போல் இல்லை எனவே கடவுள் இல்லையென கூறி கொண்டு மறுப்பு தெரிவிப்பது சிறுபிள்ளைதனமானதுதானே? சொல்லுங்கள்.

 ஐந்தறிவு மிருகங்கள் எல்லாம் கடவுள் தேடிக்கொண்டா இருக்கின்றன. (அதுகளும் எனக்கு தெரியாத வழியில் தேடிக் கொண்டு கூட இருக்கலாம்) எனவே,  நாம்  நியுட்ரான்கள் தேவைன்னு நினைச்சா பயன்படுத்தலாம், அல்லது தேவையில்லைன்னு நினைச்சா  விட்டுவிடலாம். அது போலத்தான் கடவுளும் கடவுளின் சக்தியும். தேவைபடுவோர் பயண்படுத்தட்டும் தேவையில்லை என்போர்விட்டுவிடலாம்.

             ## "உருவ வழிபாட்டை,  மூட நம்பிக்கைகளை மறுத்தவர்களும் எதிர்த்தவர்களும் ஆன்மீகவாதிகளே" ##


2) சமுதாய வேற்றுமைகளை களைவது அதாவது ஜாதிகள் இல்லாமல் செய்வது :

 பல ஆயிரம் ஆண்டுகளாக ஜாதி வேற்றுமைகள் இருக்கத்தான் செய்கிறது.  மறுக்கவே முடியாது. அதனால்தான் எல்லோரிடமும் அன்பாக இருங்கள் என எல்லா மதங்களுமே சொல்லி கொடுத்து வந்தாலும் எல்லா மதங்களிலுமே புல்லுருவிகளால் ஜாதி வேற்றுமைகள் பிரிவுகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன, இன்றும் கடைபிடிக்கப்பட்டே வருகின்றன என்பதையும் மறுப்பதற்க்கில்லை,

   ஆனால், ஜாதிகளை ஒழிப்பதாக வேற்றுமைகளை களைவதாக சொல்லி ஈவேரா என்ன? செய்தார்..  உயர்ந்த ஜாதியாக தங்களை தாங்களே கூறிக்கொண்டு இருந்தவர்களை எதிர்க்கும் மனோபாவத்தையும் எதிரான உணர்ச்சிகளை மட்டுமே தூண்டினார்.. அதன் விளைவு இன்று FC யான அய்யர்கள், பிறாமனர்கள், உயர்ந்தவர்கள்ன்னு சொல்லி கொண்டு இருந்தவர்களுக்குள்ளும் ஒருவருக்கு ஒருவர் தாங்கள்தான் உயர்ந்தவர்கள்ன்னு சொல்லி கொள்ளும் மனோபாவமும், BC களான நாடார், செட்டியார், தேவர், நாயுடு  எனச்சொல்லி கொள்ளும் பல ஜாதியினர்களில் ஒருவருக்கு ஒருவர்  தாங்கள்தான் உயர்ந்தவர்கள்ன்னு சொல்லி கொள்ளும் மனோபவமும், SC என அழைக்கப்படும் ஆதி திராவிடர்கள்,  பறையர், பள்ளர் போன்ற சமுதாய மக்களும் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் உயர்ந்தவர் தாழ்தவர்கள்ன்னு சொல்லி கொண்டு சண்டையிட்டு கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது,  BC, SC, ST பிரிவு மக்கள் FC மக்களுக்கு இணையானவர்கள் சமமானவர்கள் என்பது போய் தங்களுகுள்ளாகவே  ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி கொண்டார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. ஜாதி வேற்றுமைகள் ஒழியாமல் இன்று அதிகமான உக்கிரத்தோடு  மற்றவர்களை கொலை செய்யும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

ஆனால் ஆன்மீகம்தான் சுடுகாட்டு தோட்டி சிவனையும்,  குறத்தியான வள்ளியையும் கடவுள்ன்னு சொன்னது. எல்லா ஜாதியினரையும் ஆழ்வார்களாகவும், நாயண்மார்களாகவும் ஏற்றுக்கொண்டு கடவுளுக்கு இணையாக வணங்கி வருகிறது. ஜாதியினால் உயர்வு தாழ்வு இல்லை என்று சொல்கிறது.

ஆனால் ஆன்மீகத்தில் இந்த பகுத்தறிவுவாதிகள் போல் செயல்பட்ட சிலரால்தான் சில குளறுபடிகள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்

சமத்துவத்தை ஏற்ப்படுத்த என்ன? செய்திருக்க வேண்டும்.  ஆன்மீகவாதிகள் செய்தது போல் ஒரு ஜாதியினர், மற்றொரு ஜாதியினர் மீது அன்பு மரியாதை கொள்ள  போதித்திருக்க வேண்டும்.

3) பெண்களின் சமத்துவம் :

  பெண் இல்லாத சமூகம்  சாத்தியமே இல்லை, ஆணுக்கு துணையாக அவன் வாழ்வில் சரிபாதியாகவும் பல இடங்களில் அவளே முதன்மையானவளாகவும் இருக்கும் இந்த வாழ்க்கை அமைப்பில் பெண் மதிக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம் என்பதை உணர்த்ததான்  இந்து மதம் ஆணுக்கு நிகராக பெண்ணையும் வைத்து வணங்கி வருகிறது, மனைவி தவிர்த்து மற்ற பெண்களை தாயாகவும் சகோதரியாகவும் நினைக்கும் மனோபாவத்தையும் அன்பையும் சொல்லிகொடுத்து மக்களை நல்வழிப்படுத்தும் வேலையை செய்கிறது. இதற்க்கு மாறாக நடப்பவர்களை இறைவன் தண்டிப்பான் எனவும் சொல்லி நேர்மையானவர்களாக நீடித்து இருக்கும் வேலையை நமது ஆன்மீக முன்னோர்களால் வாழ்க்கைமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 சரி.. இப்போ ஈவேரா என்ன செய்தார் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம் அதாவது தனது வளர்ப்பு மகளையே கூட எந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம், கணவன் வேறு ஒரு பெண்களுடன் தொடர்பு வைத்தால் அவனோடு போட்டியிட்டு நீயும் பல ஆண்களோடு தொடர்புகொள், அவனுக்கு நீயும் சரிநிகர் என்று சொல்லியும் நடந்தும் காட்டினார்,  இதுதான் ஆணாதிக்கத்தை ஒழிக்கும் வ்ழி என்று கூறினார், எவ்விததிலும்  சரியானது இல்லை, தவறான பாதையில் செல்பவர்களை திருத்துவதுதான், சரியானதாக இருக்க முடியுமே தவிர ஏட்டிக்கு போட்டி மனநிலை சரியானதும் இல்லை, அதன் பின்விளைவுகளும் மிக மோசமானதே..

   சரி, என்ன செய்திருக்க வேண்டும், யாரும் எந்த ஜாதியிலும் திருமணம் செய்யலாம், இதை மறுப்பதற்க்கில்லை சரியானதுதான் ஏற்று கொள்ள வேண்டிய ஒன்றுதான், ஆனால் நடப்பது என்ன?  யாரும்  எந்த ஜாதியிலும் திருமணம் செய்யலாம்- ஆனால் அடுத்த ஜாதியில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் அவர்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், அவர்கள் சம்மதம் தேவையில்லை என்கிற குதற்கமான   மனோபாவம். அடுத்த ஜாதி பெண்களையே திருமணம் செய்ய வேண்டும் என்கிற மணோபாவமும், வளர்ப்பும், அப்போதுதான் சமத்துவம் உண்டாகும் என்கிற மடத்தனமான நினைப்பும்..

     இந்த சமுதாயத்திற்க்கு உயர்வுதாழ்வு இல்லாத சமுதாய அமைப்பு வேண்டுமா? இல்லை அடுத்த ஜாதிபெண் வேண்டுமா? இதில் எது சரியானது? ஜாதியின் பெயரால் ஏற்றதாழ்வு தீண்டாமை இல்லாத வாழ்க்கைமுறைதானே. ஆனால் பகுத்தறிவு வக்கிரபுத்தி விரும்புவதென்ன.. அடுத்த சாதிபெண்களைதான்.  அதனால்தான் ஈவேராவும், அவருடன் கூடவே வாழ்ந்த அவருடைய தம்பிகளாக இருந்தவர்களும் அவரின் கொள்கைகளை தூக்கி கொண்டு திரிபவர்களிலும் ஒழுக்கமான நல்லவர்கள் இல்லை என்பது கண்கூடான விசயம்...

  சரி இந்த சமுதாயம் ஏற்ற தாழ்வு இல்லாமல் இருக்க என்ன செய்திருக்க வேண்டும்? அல்லது என்ன செய்ய வேண்டும்.?   ஒரு ஜாதியினர் மற்ற ஜாதியினரை மதிக்க வேண்டும். அந்த பழக்கத்தைதான்  சமுதாயத்துக்கு சொல்லி கொடுத்து இருக்க வேண்டும்.  இதை ஆன்மீகம்தான் சொல்கிறது. ஆனால் எல்லா மதங்களிலும்  மூட நம்பிக்கைகள் இருக்கவே செய்கின்றன என்பது உண்மைதான். அது நீக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபாடு இல்லை. ஆனால் இந்த பொய்யான போலியான் பகுத்தறிவுவாதிகளின் பாதை சரியானது இல்லை...

இதற்க்கு சரியான தீர்வு சித்தர்களின் ஆன்மீக மார்க்கம் மட்டுமே,  மிக சரியானதாக இருக்கும். சித்தர்கள் வழியில் மட்டுமே மனிதர்கள் மனிதர்களாக நேசிக்கப்படுகிறார்கள். இங்கு ஜாதி மதம் இல்லை மனிதநேயம் மட்டுமே..
                                                       




மனமாற்றம்

# தற்கொலை மரணங்கள் #
 சமீபகாலமாக நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பிரிவினைவாதிகளின் தாக்கம் சற்று அதிகமாகி கொண்டே இருக்கிறது.. அதே வேளையில் அதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கூட்டமும் சற்று அதிகரித்தே வருகிறது. 

அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பது என்பதே ஒரு கொள்கையாக குறுகிய மனநிலை வெளிப்பாடாக, மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக செயல் புரிந்து ஒரு கூட்டம் ஆதாயமடைந்து வருகிறது.

மனிதனுக்கு தேவையான எல்லாவித வளர்ச்சிக்கான நடைமுறைகளிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது, அதை கடந்து வளர்வதுதான் வளர்ச்சி.. மனித இனம் தோன்றியதிலிருந்து  எல்லாவிதமான வளர்ச்சியிலும் இருக்கும் குறைகளை களையவே மறுபடியும் மறுபடியும்  தொடர்ந்து வளர்ச்சியடைகிறான். அதுதான் உண்மையான வளர்ச்சி. 

 தற்போது மாற்று சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்கிற பெயரில்  தொலைகாட்சியினால், சமூக ஊடங்கங்களினால் சிலர் பிரபலப்படுத்தப்பட்டு  சமூகத்தின் மீது எந்தவித அக்கரையுமில்லாமல் அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக தேசத்திற்க்கு எதிரான சக்திகளோடு கைகோர்த்து கொண்டு செயல்பட்டு மக்களை உணர்ச்சி வயப்படுத்தி தூண்டி சில சிறுசிறு தோல்விகளைகூட தாங்க இயலாதவர்களாக மக்களை மாற்றி வருகிறார்கள், 

இதன் விளைவே தற்கொலை மரணங்கள், எந்த ஒரு மிருகமும் தற்கொலை செய்து கொள்வதில்லை ஆனால் மனித இனம் மட்டுமே மிகவும் கீழ்தரமான மனநிலைமையினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளவே இயலாது ஒன்று.  

இது மாதிரியான தற்கொலை மரணங்கள் சமீப காலமாக கேடுகெட்ட அரசியல்வாதிகளாலும், நடிகர்களாலும், பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்ட ஊடங்களினாலும், அவர்களின் பொய்யான அனுதாபத்தினாலும், தியாகிகளாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த மாதிரியான தற்கொலைகளுக்கு நேரில் போய் ஆறுதல் சொல்வது, பண உதவி செய்வது,  இந்த மாதிரியான குற்றங்களை அதிகரிக்க செய்யும், அதை ஊக்குவிக்கவும் செய்யும் என்பதையும் உணர வேண்டும், இதையே ஒரு ஆதாயமாக கொண்டு ஒரு சிலர் தங்களின் பிள்ளைகளை மன நெருக்கடிக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டவும் வாய்ப்பு உள்ளது, எனப்து மறுக்க முடியாத உண்மை.. எதிர்க்க வேண்டியது அரசு கொண்டு வரும் திட்டங்களை அல்ல அதில் குற்றம் இருப்பின் மர்ற்றம் செய்ய வேண்டியது அவசியம்தான் நான் மறுக்கவில்லை, ஆனால் ஒட்டு மொத்தமாக எந்த விதமான ஆதாரமும் இல்லாமல், மக்களின் உணர்ச்சி வசப்படுதல் ஒன்றையே மூலதனமாக கொண்டு எதிர்ப்பது என்பது ஏற்க்க கூடியதாக இல்லை. 

சரி, இதற்க்கு தீர்வுதான் என்ன ? அரசு ஒரு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரும்முன் அதை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்துவது அவசியம். (ஆனால், இதில் சில கருத்துக்களுக்கு விதிவிலக்கு அவசியம் அதாவது 500, 1000 ரூபாய்கள் செல்லாது என அரசு அறிவித்தது போன்ற செயல்களை கலந்து பேச இயலாது)

இதில் மக்களின் மனநிலை முற்றிலுமாக மாற்றப்பட வேண்டியது அவசியமான ஒன்று. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் இந்த மாதிரியான தற்கொலையை கண்டு கொள்ளகூடாது.. உண்மையாகவே நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டவர்கள் என்றால் மக்களின் மனதை வலுப்படுத்தும் செயலை செய்யுங்கள்.. இல்லையெனில் அனுதாபம் காட்டுபவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுபவர்களுக்கான சட்டம் பாயவேண்டும்..




எம்மதமும் சம்மதம்

அன்பு உறவுகளே..
இன்று இந்துகளில் பலர் மட்டுமே எம்மதமும் சம்மதம் ன்னு சொல்லி தாங்கள் எல்லாமத்தவரையும் ஆதரிப்பவர்கள் நடுநிலையாளர்கள்ன்னு சொல்லி கொண்டு திரிகிறார்கள்...


ஆனால், மற்ற மதங்களை பின் தொடர்பவர்கள் யாருமே எம்மதமும் சம்மதம் என்பதை ஏற்பது இல்லை... ஏன் தெரியுமா? ந்ம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியவர்கள் நம்மை இந்த வார்த்தைகளை சொல்லி நம்மை பழக்கப்படுத்தி விட்டார்கள்...

நம்மில் பலரும் இந்த வார்த்தையை பின்பற்றி எம்மதமும் சம்மதம் என்கிற நிலையில் இருப்பவர்கள்தான் நல்லவர்கள் பெருந்தன்மையானவர்கள் என்று கருதி கொண்டு இருக்கிறார்கள்..
ஆனால், நமக்கு வழிகாட்டிய நமது முன்னோர்கள் எந்த காலத்தில் எந்த சூழ்நிலையில் இதை சொல்லி வைத்தார்கள்ன்னு சற்று ஆராய்ந்து பார்த்தீர்களானால்தான் உண்மைகள் புரியவரும்...
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் இந்துக்களே இல்லை மாற்று மதத்தினர்தான் நம்மை அப்படி அழைத்தார்கள் ஆனால் அதற்க்கு முன்பாக நாம் எந்த மதத்தவராக இருந்தோம்ன்னு எத்தனை பேருக்கு தெரியும் என எனக்கு தெரியவில்லை...
தெரியாதவர்களுக்காக, ஒரு சிறுவிளக்கம்
நம்மிடையே,. "சண்மதங்கள்" என்று. கணபதி வழிபாடு காணாபத்யம், முருக வழிபாடு கௌமாரம், சிவன் வழிபாடு சைவம், அம்பிகை வழிபாடு சாக்தம், சூரிய வழிபாடு சௌரம், விஷ்னு வழிபாடு வைணவம் என்று ஆறு மதங்கள் இருந்தன.
அவைகள், யாவும் ஒரே மாதிரியான வழிபாட்டு முறைகளை கொண்டு ஆனால் முதன்மையான கடவுள்களாக ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை பின்பற்றி வந்தார்கள் அதை ஒன்றிணைக்கும் விதமாக இந்த கடவுள்களுக்குள் நமக்கு போலவே எல்லா் கடவுள்களுக்குள்ளும் கணவன் மனைவி மகன் மாமன் மச்சான் உறவுகளை ஏற்படுத்தி கதைகள் புனைந்து நம்மை ஒன்று படுத்தினார்கள் அந்த காலகட்டத்தில்தான் நமக்கு நமது முன்னோர்கள் "எம்மதமும் சம்மதம்" ன்னு சொல்லி வைத்தார்கள் அந்த சூழ்நிலையில் நம்மிடையே இஸ்லாமியம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் தோன்றவே இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
அதற்காக நான் மற்ற மதங்களை வெறுக்க சொல்லவில்லை, ஆனால் அவர்களுக்கு தனியாக எந்தவிதமான சலுகைகளும் வழங்க வேண்டியதே இல்லை.. அதே போல் இன்று நாம் இந்துகளாகிவிட்டோம் எனவே மற்ற மதத்தவரை போலவே நாமும் நம் மதம் மட்டுமே நமக்கு சம்மதம் என வாழலாம் அதுதான் நமது உயர்வான கலாச்சாரம் பண்பாடுகளை காக்கும் எனவே நாம் இந்து என்பதில் பெருமிதம் கொள்வோம்.. நமக்கு "நம்மதம்" மட்டுமே சம்மதம்..
ஆத்தியப்பன் அர்விந்த்

கொஞ்சம் யோசிப்போமா ?


                                                               Image result for யோசி

நீங்கள் உங்களை, நாங்கள் தமிழர்கள், இந்தியர்கள், இந்துக்கள், கிருஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என்று யாராகவேணும் சொல்லி கொள்ளுங்கள், ஏன் யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள்... அது உங்கள்பாடு. ஆனால், மக்களை மதம் மாற்றம் செய்து அதன் மூலமாக தங்களுக்கு என் தேசத்தை அடிமையாக்கி ஆள நினைக்கும் கூட்டம் என் தேசத்திற்க்கு எதிரானவர்களே.. எந்தெந்த நாட்டில் எந்தவித வாழ்க்கை முறை அமைப்புகள் (மார்க்கம்) தோன்றியதோ அதையதை அந்தந்த நாட்டில் கடைபிடித்தால் போதும்.. மார்க்கங்கள் தோன்றியதும் அப்படித்தான் அந்தந்த இடத்திற்க்கு தேவையான மார்க்கங்கள் அந்த இடத்தி்ன் தேவை கருதியே உருவாகியுள்ளது அல்லது உருவாக்கப் பட்டுள்ளது அவ்வளவுதான், இந்தியாவுக்கு தேவையான மார்க்கங்கள் இந்தியாவிலே உருவாகியுள்ளது.. அது போதும் நமக்கு நம்மிடையே மிகமிக உயர்ந்த கருத்துக்கள் உண்டு. யாரும் யாரையும் மாற்ற தேவையில்லை.. மாற்றவும் கூடாது.. யார் எந்த கடவுளை வணங்கினால் என்ன? மனிதர்களை மனிதர்களாக நடத்துவோம்.. ஆனால் என் மார்க்கம் உயர்ந்தது.. எங்கள் ஆண்டவர்தான் உயர்ந்தவர்ன்னு சொல்லி மதம்மாறச் சொல்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். அப்படியானால் உங்களின் ஆண்டவர்களை இன்று ஒரு அற்புதம் எல்லாரிடமும் சொல்லிவிட்டு செய்ய சொல்லுங்கள்.. உலகில் உள்ள எந்த மார்க்கத்தின் கடவுளுக்காவது சொல்லிவிட்டு செய்யும் தகுதி உண்டா? பிறகு ஏன் இந்த தேவையற்ற மார்க்கப் போராட்டங்கள் ? இந்த போரட்டங்களை நீங்கள் முன்னெடுக்க காரணம்தான் என்ன ? மீண்டும் இது பற்றி நிறைய யோசிப்போம்..

தேர்



வீரபாண்டி தேர். இதை காண, கண்டு வணங்க கடந்த வாரம் லட்சகணக்கானோர் கூடி முண்டியடித்து வணங்கி மகிழ்ந்தனர். இன்றும் அதே அலங்காரத்துடன் தேர் நின்றிருக்க ஏறெடுத்து பார்க்கவும் ஆளில்லாமல்...  அனாதையாய் வாழ்க்கை தத்துவம் ஒன்றை சலனமில்லாமல் உரக்க சொல்லிக்கொண்டு... 

வெற்றி..

செயல் படாதவர்கள் ஜெயிப்பதற்க்கு வாய்ப்பே இல்லை...

வெற்றி

ஒருவர், நல்லவராக அறிவாளியாக  நேர்மையாக கடுமையாக உழைப்பராக இருந்தாலும் வென்றுவிட முடியாது...  நல்ல நிர்வாகியால் மட்டுமே வெற்றி பெறமுடியும்....


மனநல மருத்துவமனையிலிருந்து மூன்று நோயாளிகள் பேசிக் கொண்டனர்:


பாலு : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம மூணு பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்..


வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.


பாலு : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்; 


சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது

சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது
பாலு&வேலு: ஏன்டா...? 


சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்.வெளிய சுவரே இல்ல,நாம ஏறி குதிக்கவும் முடியாது சுவர ஓட்டபோட்டும் தப்பிக்க முடியாது;


பாலு: சரி விடுடா முதல்ல அவங்க சுவர கட்டட்டும் நாம அப்புறமா தப்பிச்சு போலாம்....

கழிசடை

தன்னை கடைந்தெடுக்க தெரியாதவன்  கடையோனே...

முட்டாள்...

தன்னை தனக்குள்ளே  கொண்டாட தெரியாதவன் முட்டாள்...

தேவை

தன் தேவைக்கு தேவைப்படும் உறவுகள் தேவை தீர்ந்த பின் தேவையில்லாமல் போகின்றன...

கொண்டாட்டம்

பிறர் கொண்டாடும் மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நம்மை நாம் கொண்டாட்டமானவர்களாக வைத்திருப்பது அவசியம்...

உறவு

என்ன பேசுறோம், ஏது பேசுறோம்னு தெரியாம மணிக்கணக்கா பேசுற வரைதான்  உறவு உயிர்ப்போடு இருக்கும்.
பேசுறதுக்கு காரணம்னு எப்ப தேட ஆரமிக்கிறமோ,
அப்போ அன்பு விலாசம் இல்லாம தொலைந்து,
நம்மை விட்டு வெகுதூரம் சென்றிருக்கும்.
உறவு சிதைந்திருக்கும்..