விநாயகர் சன்னதி

இந்த விநாயகர் சன்னதி பிள்ளையார்பட்டி, பிள்ளையார் போன்று குடைவரை கோவில் வகையில் செதுக்கப்பட்டுள்ளது 

கல்வெட்டுக்கள்

        கோவில் புதுப்பிக்கும் முன்பு இருந்த கல்வெட்டுக்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இழக்கப்பட்டு வருகிறது, கல் வெட்டுக்கள் திருத்தலத்தின் பழமையையும் , பெருமையையும் நிலை நாட்டக்கூடியது , என்பது உலகத்தவர் அறிந்த விஷயம், தற்பொழுது திருத்தலத்தின் பெருமை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

தென் கைலாசமலை


தென் கைலாசமலை

   தென் கைலாசமலை  இதனை காணும் வகையில் அமைந்துள்ள  சட்டநாதரின் தியான இட்ம் 

அத்திமரம்

      ஸ்தல விருட்சகம் அத்திமரம், இதன் அடியில் சட்டநாதமுனி  தவம் செய்ததாக கூறப்படுகிறது 

கைலாசநாதர் கோவில்

கைலாசநாதர் கோவில் உள்பிரகாரம் ,மண்டபம், கோபுர தரிசனம் , வயதானவர்களும்  வந்து செல்லும் உயரத்தில் கைலாசநாதர் மலை கோவில், கோவில் வாசல் வரை ஆட்டோ, கார் , செல்லும்  வகையில் மலை பாதை அமைந்துள்ளது 

கைலாச தீர்த்தம்


Kailasanathar ( SOUTH KAILAS ) Temple

                       கைலாசநாதர் கோவிலின் வடக்குபுற தோற்றம் 

கைலாசநாதர் ( தென் கயிலாயம்), (தென் கைலாசம் )

        தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் தேனி பெரியகுளம் மெயின் ரோட்டில் ''கைலாசபட்டி'' என்ற கிராமத்தின் அருகில் மலைமேல் அமைந்துள்ளது இந்த கைலாசநாதர் கோவில் இது சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முந்தய கோவிலென்றும், மாறவர்மன் என்ற பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது என்றும் , சோழ மன்னரால் கட்டப்பட்டது என்றும் செவிவ்ழி செய்தி உள்ள்து. இக் கோவில் தென் கைலாசம் எனவும் தென்கயிலாயம் எனவும் அழைக்கப்படுகிறது
       இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 900 அடி உயர மலை மேல் அமைந்துள்ளது.

      அமைதியான் அருமையான இய்ற்கை சூழலில் அமந்துள்ளது மலைமேல் பெரிய மரங்கள் இல்லாது குறுஞ் செடிகள் மட்டுமே உள்ளது


  இது கயிலாய தீர்த்தம், இங்கு சப்தகன்னியர்கள் வந்து நீராடி கைலாசநாதரை வணங்குவதாக சொல்லப்படுகிறது.




   வினாயகர் சன்னதி
   சப்தகன்னியர்:  பிராமி - மாகேசுவரி - கவுமாரி - வைஷ்ணவி - வராகி - இந்திராணி - சாமுண்டி எனப்பெயர் பெறுவர்.இவர்களுடன் வீரபத்திரை என்ற திருமேனியும்; விநாயகி என்ற திருமேனியும்; திருக்கோயில்களில் இருக்க வேண்டும் ஆனால் தெட்சினாமூர்த்தியும் ,விநாயகரும் உள்ளனர்
                                         விநாயகர்
                 கருவறை விமானம்








                             சண்டிகேசுவரர்
                  முருகர் வள்ளி தெய்வாணையுடன்
             முருகர் சன்னதி





 அருள்மிகு பெரியநாயகி அம்மன் சன்னதி
   அருள்மிகு கைலாசநாதர் சன்னதி

           அருள்மிகு பெரியநாயகி அம்மன் 
                                     அருள்மிகு கைலாசநாதர்
                     தென் கயிலை மலை
              ஸ்தலவிருட்சகம்  அத்தி மரம் இங்கு பவுர்னமி தோறும் சட்டநாத முனி ( பதினெட்டு சித்தர்களில் ஒருவர் ) வந்து கைலாசநாதரை வணங்குவதாகவும், ஸ்தல விருட்சகத்தின் அடியில் தவம் செய்வதாகவும் கருதபடுகிறது,

   கோவிலில் இருந்த பழைய கல்வெட்டுக்கள் தற்ப்பொழுது கோவிலை புதுப்பிக்கும் பொழுது உடைத்து கோவிலின் பின்புறம் வீசியெறியப்பட்டுள்ளது
பெரியநாயகி அம்மனின் பழைய கருவறை
அருள்மிகு பெரியநாயகி அம்மன்
அருள்மிகு கைலாசநாதர்
    வடக்கே உள்ள கைலாசம் போன்றே தோற்றமளிக்கும் தென் கைலாசம்




 கிரிவலம் சுற்றும் மலை பாதை





அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவில்


ஒரு பெரிய பாறையில் விநாயகர் விக்ரகம் செதுக்கப்பட்டு அதன் முன்பு கோவில் கட்டப்பட்டுள்ளது .

  சட்டமுனி வடகயிலாயம் சென்று வணங்கும் பொழுது குளிர் தாங்க முடியவில்லை ( அதனால்தான் சட்டமுனி கம்பளி சட்டை அணிந்து கொண்டிருந்தார் என்வேதான் அவருக்கு சட்ட முனி என்ற பெயர் ஏற்ப்பட்டது ) என கூறி வேண்டிக்கொண்டதற்க்கு இண்ங்க சிவபெருமான் காட்சியளித்த திருத்தலம், காட்சியளித்த சிவனார் இனி வடகயிலாயம் வந்து வணங்க இயலாதவர்கள் எம்மை இங்கே காண்லாம், இங்கு எம்மை வணங்கினாலும் வடகயிலாயம் வந்து வணங்கிய பலன் கிடைக்கும் எனவும் அருளினார்.  திருவண்ணாமலைக்கு அடுத்து பெரிய அளவில் கிரிவலம் நடைபெறும் திருத்தலம் ஒரே திருத்தலத்தில் கயிலாயத்தையும் ,திருவண்ணாமலை திருத்தலத்தையும் தரிசித்து வணங்கிய புண்ணியம் கிடைக்கும், இங்கு வண்ங்கி வேண்டிக்கொள்வோருக்கு உடனடியாக பலன் கிடைக்கும்