விஜயநகரப் பேரரரசின் பிரதிநிதியான விஸ்வநாத நாயக்கர் மதுரையை ஆண்டபோது( ஆண்ட காலம் கி பி 1529 முதல் கி பி 1564 வரை )( முல்லை பெரியாறு அணையை முதலில் கட்டியவரும் இவரே ) அவர் ஒரு கோட்டையை கட்டி, அதில் கம்பராயர் பெருமாளுக்கும் , காசி விஸ்வநாதருக்கும் கோயிலை கட்டினார். இப்பகுதியை கம்ப நாயக்கன் மன்னர் ஆட்சி செய்தார். இதனாலேயே இந்த ஊர் கம்பம், என பெயர் பெற்றது.எனவும், பெருமாள் பக்தரான மன்னரது கனவில் பெருமாள் தோன்றி தான் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் ஒரு கல் கம்பத்தின் அருகில் உள்ளதாக காட்சியளித்தார் தன்னை வணங்கி வருபவர்களுக்கு குறைகள் நிவர்த்தியாகும் எனவும் அருளினார் அதன்படி பெருமாளுக்கு கோவில்கட்டினார் பெருமாள் கம்பத்தின் அடியில் கிடைத்ததால் அவருக்கு கம்பராயர் எனவும் அந்த ஊருக்கு கம்பம் எனவும் ஊரை ஆண்ட நாயக்க மன்னருக்கு கம்பநாயக்கன் எனவும் பெயர் வந்தது என கூறுகிறார்கள், பாளையங்கள் அடங்கிய மதுரை மண்டலத்தில் கம்பமும் ஒன்றாக இருந்தது. கோட்டையைச் சுற்றி எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க உயர்ந்த மாடங்கள் அமைக்கப்பட்டன. அதை இப்போதும் காணலாம். அந்த மாடம் மொட்டையாண்டி கோயிலாக மாறியுள்ளது. அந்த கோட்டையின் வாசல் மட்டும் ஒரு அற்புத நினைவுச் சின்னமாக உள்ளது. கோட்டை வாசல் எனப்படுகிறது.
சிலப்பதிகார காலத்தில் புகழ்பெற்ற ஊர் இது. சிலப்பதிகாரத்தில் கோவலன் இறந்த பின், மதுரையை தீக்கு இரையாக்கிய கண்ணகி வைகையாற்றின் கரையோரமாக நடந்து வந்து கம்பம், கூடலூர் இடையில் உள்ள பாறையிலிருந்து புஷ்பக விமாணம் மூலம் விண்ணுலகம் ஏந்தி சென்றதாக கூறப்படுகிறது.அந்த விண்ணேத்திப் பாறை தான் தற்போது வண்ணாத்திப் பாறையாக மாற்றமடைந்துள்ளது. கம்பம் நகருக்கு பக்கத்தில் ஓடும் ஆறு கண்ணகியின் நினைவாக, கூத்தனாட்சி ஆறு எனப்படுகிறது ,ஆலயங்களில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது.பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி ,அனுமன் ஜெயந்தி , ராமநவமி ஆகிய விழாக்களும், சிவனுக்கு சிவராத்திரி, ஆடிப்பெருக்கு, ஐப்பசியில் அன்னாபிஷேகம், ஆகிய விழாக்களும் நடக்கிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக