குபேர லட்சுமி திருக்கோயில்


குபேர லட்சுமி திருக்கோயில்

குபேர லட்சுமி திருக்கோயில் பிள்ளையார் பட்டி கோவிலில் இருந்து காரைக்குடி சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது,

தீர்த்த தொட்டி கோயில்

இக் கோயில் தீர்த்த தொட்டி கோயில் எனவும் அழைக்கப்படுகிறது

விருப்பாட்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில்


ஸ்ரீ சித்திர புத்திர நாயனார் திருக்கோயில்

இக் கோயிலில் எழுந்தருளி உள்ள சித்திர குப்தரை வணங்கினால் ஆயுள் அதிகரித்து பாவங்கள் குறையும்

ஸ்ரீ சித்திர புத்திர நாயனார் திருக்கோயில்



ஸ்ரீ  சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. இக் கோவில் தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி கிராமத்தின் அருகில் தீர்த்த தொட்டி கோவில் எதிர்புறம் அமைந்துள்ளது. இவர் சித்திர குப்தன் என்றும் அழைக்கப்படுகிறார், இவர் நீதிதேவனிடம் வரவு செலவு கணக்கு எழுதும் பணியை செய்துவருகிறார்.

சித்திர புத்திரன்

சிவன், ஜீவராசிகள் செய்யும் அனைத்துச் செயல்களையும் பராமரிப்பு செய்ய எண்ணினார். இந்தப் பணியை யாரிடம் ஒப்படைப்பது என்று எண்ணியபடி சக்திதேவியைப் பார்க்கிறார். அதை புரிந்து கொண்டு  அவர் ஒரு சித்திரம் வரைகிறார். அந்த சித்திரத்திற்கு சிவனும் சக்தியும் சேர்ந்து உயிரளிக்கின்றனர். அதிலிருந்து தோன்றியவர்தான் சித்திர புத்திரர். அதன் பின்பு இவர் தேவலோகத்தின் தலைவன் இந்திரன், அவரது மனைவி இந்திராணியால் வளர்க்கப்பட்டார். அதன் பிறகு சிவன் அனைத்து ஜீவராசிகளின் செயல்கள் குறித்து கணக்குகள் எழுதி அதைப் பராமரிக்கும் பணியை இவரிடம் ஒப்படைத்தார் என்கிறது இந்து சமய புராணங்கள். சித்திர புத்திரன் என்கிற பெயரை விட சித்திர குப்தன் என்கிற பெயரே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்திரம் என்றால் "ஆச்சரியமானது", "குப்தம்" என்றால் "ரகசியம்" என்று பொருள். இவர் எப்படிப்பட்ட ரகசியத்தையும் கண்டறிந்து கணக்கெழுதி விடும் திறனுடையவர். இதனால் இவருடைய கணக்குகள் எழுதும் முறை ஆச்சரியமானது பிறருக்குத் தெரியாதது எனும் பொருளில் இவரை "சித்திரகுப்தன்" என்றே அழைக்கின்றனர்.

நம்பிக்கைகள்

  • உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு  முதல் இறப்பு  வரையிலான அனைத்துக் கணக்குகளையும் எழுதிப் பராமரித்து வருபவர் சித்திர புத்திர நாயனார்தான் என்பது ஹிந்து  சமய நம்பிக்கையுடையவர்களின் நம்பிக்கை. மேலும் ஒருவருடைய இறப்புக்குப் பின் இவருடைய கணக்கைப் பார்த்துத்தான் சொர்க்கம் அல்லது நரகம் போன்றவற்றில் இடமளிக்கப்படும் என்பது இந்து சமயத்தவர்களின் நம்பிக்கை.
  • நவக்கிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதி என்றும் கேது தோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், அத்தோசம் நீங்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், அவர்களது பாவங்களை குறைப்பார் என்பதும் ஒரு நம்பிக்கை.
  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று விரதமிருந்து உப்பில்லாத உணவு உண்டு இவரை வேண்டிக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலம் அதிகமாகும் என்பது நம்பிக்கை.

விருப்பாட்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில்





 தேனி மாவட்டம்  போடி வட்டத்தில்  கோடங்கிப்பட்டி  கிராமத்தில்   தீர்த்த தொட்டி என்னும்   இடத்தில் அமைந்துள்ள     விருப்பாட்சி  ஆறுமுகநாயனார்  திருக்கோயில்

                                  :ஸ்தல பெருமை :

    வயலில் கிடைத்த முருகன்: இங்கு வசித்த விவசாயி ஒருவரின் கனவில் தோன்றிய முருகன், ஒரு வயலைச் சுட்டிக்காட்டி தான் அங்கு சிலை வடிவில் இருப்பதாக உணர்த்தினார். விவசாயி, இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரிடம் கூறினார். அதன்பின் வயலில் முருகன் சிலையை எடுத்த அவர்கள், இங்கு பிரதிஷ்டை செய்து சன்னதி எழுப்பினர். விருப்பாச்சி என்ற ஊரில் பக்தருக்கு அருள்புரிந்த முருகன் எழுந்தருளிய தலமென்பதால், "விருப்பாச்சி ஆறுமுகனார்' என்று பெயர் பெற்றார்.

நாக சுப்பிரமணியர்: மூலஸ்தானத்தில் முருகன், ஆறு முகங்களுடன் திருவாட்சியுடன் சேர்ந்த சிலை அமைப்பில் காட்சி தருகிறார். உடன் வள்ளி, தெய்வானை இல்லை. காலையில் மட்டும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து பூஜிக்கின்றனர். இவருக்கு அருகில், ஏழு தலை நாகம் குடைப்பிடித்தபடி இருக்க, அதன் மீது மயில் வாகனத்துடன் நின்ற கோலத்தில் நாக சுப்பிரமணியர் காட்சி தருகிறார். இவருக்கு பூஜை செய்தபின்பே, மூலவரை பூஜிக்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இவரைப்போலவே கோயில் முன் மண்டபத்தில் செல்வ கணபதிக்கு அருகில் நாக விக்னேஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

ருத்ராட்ச சிவன்: தனி விமானத்துடன் கூடிய சன்னதியில், சிவன் "ருத்ர மூர்த்தி' என்ற பெயரில் அருளுகிறார். இவருக்கு எதிரில் நந்தி இல்லை. சிவதீட்சை பெற்று, குரு அந்தஸ்தில் இருப்பவர்கள் நெற்றியில் ருத்ராட்ச மாலையை அணிவர். இதைப்போலவே இங்கு சிவலிங்க பாணத்தில் ருத்ராட்ச மாலை இருக்கிறது. இங்கு சிவன், குருவாக இருப்பதாக ஐதீகம். எனவே, இவரது சிலையோடு சேர்த்து ருத்ராட்ச வடிவம் வடிகப்பட்டிருப்பது வேறெங்கும் காண முடியாத அமைப்பு. குரு பெயர்ச்சியால் தோஷம் உண்டானவர்கள், வியாழக்கிழமைகளில் இவருக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வேண்டிக்கொள்ளலாம். ருத்ரமூர்த்திக்கு ஐப்பசி பவுர்ணமில் அன்னாபிஷேகம் செய்யும்போது, அன்னத்திலேயே ஒரு லிங்கம் பிடித்து, பூ, வில்வம் அணிவித்து, சந்தனம் வைத்து பூஜை செய்கின்றனர். மறுநாள் அதை ஆற்றில் கரைத்து விடுகின்றனர். இந்த "அன்ன லிங்க' தரிசனம் மிக விசேஷமானது.

முனை மழுங்கிய வேல்: கொட்டக்குடி ஆற்றின் மேற்கு கரையில் இக்கோயில் அமைந்திருக்கிறது. சித்திரைப் பிறப்பன்று இந்த முருகன், வயலில் கிடைத்தாராம். எனவே அன்று இவருக்கு விசேஷ அபிஷேக, பூஜைகளுடன் விழா நடக்கிறது.முருகன் சன்னதி எதிரில், முற்காலத்தில் வழிபடப்பட்ட வேல் இருக்கிறது. இதன் முனை, கூர்மையின்றி உடைந்த நிலையிலேயே தற்போதும் இருக்கிறது. முருகன், தனது பக்தர்களுக்கு இவ்வாறு முனை மழுங்கிய நிலையில் கொடுத்தாகச் சொல்கிறார்கள். கோயிலுக்கு எதிரே தீர்த்தத்தொட்டி உள்ளது. இந்த தீர்த்தம் எங்கிருந்து உருவாகி வருகிறது எனத் தெரியவில்லை. முருகனின் பாதத்திற்கு கீழே உற்பத்தியாகி, இங்கு வருவதாகச் சொல்கின்றனர்.

                                         : வரலாறு :

அசுரன் ஒருவனை அழிக்கச் சென்ற சப்தகன்னியர், தவறுதலாக ஒரு மகரிஷியை அழித்து விட்டனர். இந்த தோஷம் நீங்க, இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி முருகனை வழிபட்டனர். அவர்களுக்கு காட்சி தந்த முருகன், தோஷத்தை போக்கியருளினார். பிற்காலத்தில் இங்கு தீர்த்தம் மட்டும் இருந்தது.

பல்லாண்டுகளுக்கு பின்பு இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் பழநிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பினார். வழியில் விருப்பாச்சி என்ற இடத்தில், கலவரம் உண்டானது. இதனால் அவரால் ஊர் திரும்பமுடியவில்லை. வீடு திரும்பும் வரையில், வழியில் தங்கக்கூடாது என நினைத்தவர், முருகனிடம் தனக்கு வழி காட்டும்படி வேண்டினார்.

அப்போது அங்கு பாலகன் ஒருவன் அவரிடம், ஒரு முனை மழுங்கிய வேலைக் கொடுத்து, "இதை கையில் பிடித்துக்கொண்டு செல்லுங்கள். வழி கிடைக்கும்!' என்றான். அவரும் வேலை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பினார். வழியில் இங்கிருந்த தீர்த்தத்தொட்டியில் நீராடியவர், தீர்த்த கரையில் வேலை வைத்துவிட்டுச் சென்றார். பின்பு பக்தர்கள் இந்த வேலையே, முருகனாக பாவித்து வழிபட்டு வந்தனர்.




பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் திருக்கோவில்


பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் திருக்கோவில்


பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் திருக்கோவில்


பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் திருக்கோவில்


பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் திருக்கோவில்


பிள்ளையார்பட்டி









பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் திருக்கோவில் 

தங்கவேல் சுவாமிகள் ஜீவசமாதி

சுவாமிகளை தினசரி பக்தர்கள் வணங்கி வருகிறார்கள், நான் அங்கிருந்த சமயத்தில் அவரின் வரலாறு பற்றி ஒருவருக்கும் சரிவர தெரிந்திருக்கவில்லை  எனவே  தெரிந்து கொண்டு சுவாமிகள் பற்றி எழுதுகிறேன்

தங்கவேல் சுவாமிகள் ஜீவசமாதி

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் எதிர்புறம் வைகை நதியின் தென் கரையில் சுப்பையா சுவாமிகள் மடம் உள்ளது. இங்கு தங்கவேல் சுவாமிகள் ஜீவசமாதியும் உள்ளது
 தங்கவேல் சுவாமிகளின் சிஷ்யர் ஸ்ரீ சுப்பையா சுவாமிகளின் ஜீவசமாதி

ஜக்கம்மா கோவில் Jakkamma Kovil



தேனி மாவட்டம் பூமலைகுண்டு  கிராமத்தின் தென்புறம் இந்த ஜக்கம்மா கோவில் அமைந்துள்ளது, இந்த  கோவிலில் அக்காளாக, அன்னை உமையவள் பார்வதி தேவி ''ஜக்கம்மா'' என்றும், அவளது சகோதரன் தம்பியாக, மாயவன் கண்ணன், ''அம்போதி''யாகவும் எழுந்தருளி உள்ளனர், மேலும் இங்கு நவகிரகங்களும் , கருப்பசாமியும் அமைந்துள்ளது ,இந்த கோவிலில் சிறு கோவில் வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, இந்த கிராமக்கொவிலுக்கு பல நூறு மைல்களுக்கு தள்ளி வாழ்ந்து வருபவர்கள் கூட வந்து வணங்கி செல்கிறார்கள் 

Windmill,காற்றாலை,


Windmill-காற்றாலை


Windmill-காற்றாலை





தேனி மாவட்டம் காமாட்சிபுரம் பகுதியில் அதிக அளவில் நிறுவப்பட்டு வரும் காற்றாலைகள், காற்றாலை உரிமையாளர்கள் நிலங்களுக்கு அதிக விலைகள் தருவதாலும், விவசாய வேலையாட்கள் கிடைப்பது அரிதாகி வருவதாலும், விவசாயிகள், விளைநிலங்களை விற்று விட்டு வேறு தொழில்களுக்கு செல்வதால் இப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் எல்லாம் தரிசு நிலங்களாக ஆகிவருகின்றன
Theni District Kamatchipuram area dry lands

kodumudi temple-கொடுமுடி கோவில்,

கோவிலின் உள்பிரகாரத்தில் சூரியன், சந்திரன், காலபைரவர், நவகிரகங்கள், சனிஸ்வரர், அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சினாமூர்த்தியும், விநாயகர், காசிவிஸ்வநாதர், பெருமாள் சன்னதியில் பன்னிரெண்டு ஆழ்வார்களும் பரமபதநாதர் , வெங்கடசலபதி, கருடன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்

kodumudi temple-கொடுமுடி கோவில்,


kodumudi temple-கொடுமுடி கோவில்,

அருள்மிகு மகுடேஸ்வரர், அருள்மிகு வீரநாரயனப்பெருமாள் கோவில் உள் கோபுரங்கள் 

அருள்மிகு வடிவுடை நாயகி சன்னதி -கொடுமுடி

அருள்மிகு வடிவுடை நாயகி சன்னதி

மகாலட்சுமி ஆலயம் -கொடுமுடி

                                         மகாலட்சுமி  ஆலய கருவறை முன் தோற்றம்

பிரம்மா ஆலயம்-கொடுமுடி

பிரம்மா ஆலயம் இந்த கோவிலின் உள்ள ஸ்தல விருட்சகமான வன்னி மரத்தின் அடியில் உள்ளது.பிரம்மாவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது, ஸ்தல விருட்சகமான வன்னிமரம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்ப்பட்டது என கூறுகிறார்கள். இந்தமரத்தில் மற்ற இடங்களில் உள்ள வன்னிமரம் போன்று முள், பூ, காய்  இல்லாமல் இருக்கிறது தனி சிறப்பு

Kodumudi Temple-கொடுமுடி கோவில்

மகாலட்சுமி அம்மன் சன்னதி

Kodumudi Temple-கொடுமுடி கோவில்

இங்கு உள்ள தீர்த்தம் மிக மிக விசேசமாக கருதப்படுகிறது எனவே மிக முக்கியமான வைபவங்களுக்கு இங்கிருந்து தீர்த்தம் எடுத்து செல்கிறார்கள்

Kodumudi Temple-கொடுமுடி கோவில்,


Kodumudi Temple-கொடுமுடி கோவில்,

வீர நாராயனப்பெருமாள், பிரம்மா, மகுடேஸ்வரர் (சிவன் ) ஆகிய மும்மூர்த்தி எழுந்தருளி உள்ள திருக்கோவில் இக் கோவிலுக்கு மூன்று வாசல்களும் ராஜ கோபுரங்களும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிவலிங்கத்திற்கு விசேச நாட்களில் மூன்று முகமுள்ள கவசமணிந்து பூஜைகள் செய்யப்படுகின்றன

Kodumudi Temple-கொடுமுடி கோவில்,


காவிரி ஆறு-கொடுமுடி கோவில்

 

காவிரி ஆறு , அகத்தியரின் கமண்டலத்து நீரை விநாயகர் காக்கை உருவம் கொண்டு கவிழ்த்ததினால் உருவான ஆறு என்பதனால் இதற்க்கு ''காவிரி'' என்று பெயர்

காவேரி ஆறு -கொடுமுடி கோவில்

              

 தமிழ்நாடு  ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் மகுடேஸ்வரர் ஆலயத்தின் முன்புறம் செல்லும் காவேரியாறு இது காசியிலுள்ள கங்கை தீர்த்தத்திற்கும் ராமேஸ்வரத்திலுள்ள அக்னி தீர்த்ததிற்கும் நிகரான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.ஆகையால் இங்கு முன்னோர்களுக்கான திதி போன்றவைகளும், பரிகாரங்களும் செய்யப்படுகின்றன

kodumudi temple- மகுடேசுவரர்-வீர நாரயனப்பெருமாள்-கொடுமுடி கோவில்










ஸ்ரீ குழந்தையானந்தர் -சித்தர்


ஸ்ரீ குழந்தையானந்தர் மதுரைக்கு அருகில் உள்ள சமயநல்லூரில் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் பதினேழாம் நூற்றாண்டின் முற்ப்பகுதியில் காலில் சங்கு சக்கர ரேகை உள்ளவராக, மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மனின் அருளால்   அவதரித்தார், பின்பு மதுரை காளவாசல் பேருந்து நிறுத்தத்தில் 1932  ஆம் ஆண்டு ஜீவ சாமாதி அடைந்தார், சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக திருமேனியுடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது  

ஜீவசமாதி முன் கோபுரத்தொற்றம்

மேல் உள்ள படங்கள் மகான் அவர்கள் வைத்து வணங்கிய ஸ்ரீசக்கரம் ,தற்பொழுது ஜீவ சமாதின் அருகில் பீடத்தில் அமைத்து வழிபடபடுகிறது
ஸ்ரீ சக்கரத்தை ஒட்டி மகானின் திரு உருவத்தை விக்ரகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது
                                                       
ஸ்ரீ குழந்தையானந்தர் ஜீவ சமாதின் மேல் லிங்கமும் அதன் அருகில் வினாயகப்பெருமானும் அமைக்கப்பட்டுள்ளனர், இங்குள்ள லிங்கமானது கோவில்களில் உள்ளது போல் இல்லாமல் சற்று வித்தியாசமான உருவில் அமைக்கப்பட்டுள்ளது, மகான் பயன்படுத்திய கைத்தடியும் வைக்கப்பட்டுள்ளது

                                                 என் அனுபவம்
                                                 ---------------------
  நான் மகான் குழந்தையானந்தரை கேள்விப்பட்டு அவர் சமாதியில் சென்று வணங்கிவர விருப்பங்கொண்டு மிகவும் சாதாரண மனநிலையோடுதான் சென்றேன், அங்கு சென்றதும் அந்த கருணை கோவிலின் முன்புற தோற்றத்தை எனது காமிராவினால் (இந்த வலைபதிவில் பதிவு செய்வதற்காக ) பதிவு செய்து கொண்டேன் பின்பு எனது காலணிகளை அதற்குரிய இடத்தில் கழற்றி வைத்து விட்டு அவரின் சமாதியில் வணங்க சென்றேன், காலணிகளை கழற்றிய எனது கால்கள் சமாதின் தரையில் பட்டதும் என்னையும் அறியாமல் எனது உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பும் புல்லரிப்பும் ஏற்ப்பட்டு மனம் மருகியது எதோ ஒரு பரவசம் என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு அதிர்வு ஏற்ப்பட்டுக் கொண்டே இருந்தது கண்களில் நீர் மல்கியது  ஏனென்று எனக்கு புரியவில்லை,பேசுவதற்கு கூட முடியாத  அந்த அதிர்வுகளோடு மகான் சமாதியை வணங்கினேன், அப்பொழுது காலை நேரம் என்பதனால், மகானின் (லிங்கத்தின் மேல் பூக்களோ ஆடைகளோ இன்றி காலை வேளை பூஜைக்கு தயாராகி கொண்டிருந்தனர் ) முழு தரிசனமும் எனக்கு கிடைத்தது , அப்பொழுது வலைப்பதிவில் இடுவதற்காக சில போட்டோக்களை எடுத்துக்கொள்ளலாம் என மனது சொல்ல நான் போட்டோக்களை எடுத்தேன் ,ஸ்ரீ சக்கரம் உள்ள பீடத்தை போட்டோ எடுக்கும் பொழுது பலமுறை முயன்றும் பதிவாகவில்லை பின்பு மகானை மிகவும் வேண்டி எடுத்தபொழுது பிளாஷ் இல்லாமல் இருமுறை மட்டும் பதிவானது பிறகு காமிரா பழுதடைந்து விட்டது, பிறகு காமிராவை சரி செய்து சமாதியை போட்டோ எடுக்க முயன்றேன் அப்பொழுதும் படம் பதிவாகவில்லை பின்பு வீடியோ எடுக்க நினைத்து முயன்றும் பதிவாகவில்லை காமிரா பழுதாகிவிட்டது பின்பு சரி செய்து விட்டு முயன்றேன் பதிவாகவில்லை சமாதியை விட்டு வெளியில் வந்து முன் கோபுரத்தை பதிவு செய்தேன் பதிவாகியது, எனக்கு ஒன்றும் மட்டும் புரிந்தது மகான் மகாசக்தி படைத்தவர் என்றுமட்டும், இவளவும் நடக்க சில மணி நேரங்களாகியும் எனக்குள் ஏற்ப்பட்ட அதிர்வு இன்னும் இருந்து கொண்டே இருந்தது, நான் மகானை வணங்கி அவரை பற்றி தெரிந்து கொள்ள விரும்பி வந்தேன் ,அவரை முழுவதும் அறிந்து கொள்ள எனக்கு பக்குவம் போதாது என்று புரிந்தது ,மேலும் சிறிது நேரம் மகானை வணங்கி விட்டு வந்தேன், பின்பு சிறிது நேரம் கழித்து எனக்குள் ஏற்ப்பட்ட அதிர்வுகள் குறைந்தன, இப்பொழுது இந்த பதிவை எழுதும் போது அதே அதிர்வு எனக்குள் ஏற்ப்படுகிறது, நான் அனுவிப்பதை முழுமையாக சொல்ல எனக்கு எழுதும் எழுத்தாற்றலும் இல்லை, முடிந்தால் அவசியம் ஒருமுறையேனும் மகானை தரிசனம் செய்து பலன் பெறுங்கள்
  மேல உள்ள படங்களில் மகானின் திரு உருவமும் , சமாதியும் காப்பி செய்யப்பட்டவை