ஸ்ரீ குழந்தையானந்தர் -சித்தர்


ஸ்ரீ குழந்தையானந்தர் மதுரைக்கு அருகில் உள்ள சமயநல்லூரில் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் பதினேழாம் நூற்றாண்டின் முற்ப்பகுதியில் காலில் சங்கு சக்கர ரேகை உள்ளவராக, மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மனின் அருளால்   அவதரித்தார், பின்பு மதுரை காளவாசல் பேருந்து நிறுத்தத்தில் 1932  ஆம் ஆண்டு ஜீவ சாமாதி அடைந்தார், சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக திருமேனியுடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது  

ஜீவசமாதி முன் கோபுரத்தொற்றம்

மேல் உள்ள படங்கள் மகான் அவர்கள் வைத்து வணங்கிய ஸ்ரீசக்கரம் ,தற்பொழுது ஜீவ சமாதின் அருகில் பீடத்தில் அமைத்து வழிபடபடுகிறது
ஸ்ரீ சக்கரத்தை ஒட்டி மகானின் திரு உருவத்தை விக்ரகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது
                                                       
ஸ்ரீ குழந்தையானந்தர் ஜீவ சமாதின் மேல் லிங்கமும் அதன் அருகில் வினாயகப்பெருமானும் அமைக்கப்பட்டுள்ளனர், இங்குள்ள லிங்கமானது கோவில்களில் உள்ளது போல் இல்லாமல் சற்று வித்தியாசமான உருவில் அமைக்கப்பட்டுள்ளது, மகான் பயன்படுத்திய கைத்தடியும் வைக்கப்பட்டுள்ளது

                                                 என் அனுபவம்
                                                 ---------------------
  நான் மகான் குழந்தையானந்தரை கேள்விப்பட்டு அவர் சமாதியில் சென்று வணங்கிவர விருப்பங்கொண்டு மிகவும் சாதாரண மனநிலையோடுதான் சென்றேன், அங்கு சென்றதும் அந்த கருணை கோவிலின் முன்புற தோற்றத்தை எனது காமிராவினால் (இந்த வலைபதிவில் பதிவு செய்வதற்காக ) பதிவு செய்து கொண்டேன் பின்பு எனது காலணிகளை அதற்குரிய இடத்தில் கழற்றி வைத்து விட்டு அவரின் சமாதியில் வணங்க சென்றேன், காலணிகளை கழற்றிய எனது கால்கள் சமாதின் தரையில் பட்டதும் என்னையும் அறியாமல் எனது உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பும் புல்லரிப்பும் ஏற்ப்பட்டு மனம் மருகியது எதோ ஒரு பரவசம் என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு அதிர்வு ஏற்ப்பட்டுக் கொண்டே இருந்தது கண்களில் நீர் மல்கியது  ஏனென்று எனக்கு புரியவில்லை,பேசுவதற்கு கூட முடியாத  அந்த அதிர்வுகளோடு மகான் சமாதியை வணங்கினேன், அப்பொழுது காலை நேரம் என்பதனால், மகானின் (லிங்கத்தின் மேல் பூக்களோ ஆடைகளோ இன்றி காலை வேளை பூஜைக்கு தயாராகி கொண்டிருந்தனர் ) முழு தரிசனமும் எனக்கு கிடைத்தது , அப்பொழுது வலைப்பதிவில் இடுவதற்காக சில போட்டோக்களை எடுத்துக்கொள்ளலாம் என மனது சொல்ல நான் போட்டோக்களை எடுத்தேன் ,ஸ்ரீ சக்கரம் உள்ள பீடத்தை போட்டோ எடுக்கும் பொழுது பலமுறை முயன்றும் பதிவாகவில்லை பின்பு மகானை மிகவும் வேண்டி எடுத்தபொழுது பிளாஷ் இல்லாமல் இருமுறை மட்டும் பதிவானது பிறகு காமிரா பழுதடைந்து விட்டது, பிறகு காமிராவை சரி செய்து சமாதியை போட்டோ எடுக்க முயன்றேன் அப்பொழுதும் படம் பதிவாகவில்லை பின்பு வீடியோ எடுக்க நினைத்து முயன்றும் பதிவாகவில்லை காமிரா பழுதாகிவிட்டது பின்பு சரி செய்து விட்டு முயன்றேன் பதிவாகவில்லை சமாதியை விட்டு வெளியில் வந்து முன் கோபுரத்தை பதிவு செய்தேன் பதிவாகியது, எனக்கு ஒன்றும் மட்டும் புரிந்தது மகான் மகாசக்தி படைத்தவர் என்றுமட்டும், இவளவும் நடக்க சில மணி நேரங்களாகியும் எனக்குள் ஏற்ப்பட்ட அதிர்வு இன்னும் இருந்து கொண்டே இருந்தது, நான் மகானை வணங்கி அவரை பற்றி தெரிந்து கொள்ள விரும்பி வந்தேன் ,அவரை முழுவதும் அறிந்து கொள்ள எனக்கு பக்குவம் போதாது என்று புரிந்தது ,மேலும் சிறிது நேரம் மகானை வணங்கி விட்டு வந்தேன், பின்பு சிறிது நேரம் கழித்து எனக்குள் ஏற்ப்பட்ட அதிர்வுகள் குறைந்தன, இப்பொழுது இந்த பதிவை எழுதும் போது அதே அதிர்வு எனக்குள் ஏற்ப்படுகிறது, நான் அனுவிப்பதை முழுமையாக சொல்ல எனக்கு எழுதும் எழுத்தாற்றலும் இல்லை, முடிந்தால் அவசியம் ஒருமுறையேனும் மகானை தரிசனம் செய்து பலன் பெறுங்கள்
  மேல உள்ள படங்களில் மகானின் திரு உருவமும் , சமாதியும் காப்பி செய்யப்பட்டவை

கருத்துகள் இல்லை: