பாலசுப்பிரமணியர் திருக்கோயில்,

 ராஜேந்திர சோழீஸ்வரர்


 அறம் வளர்த்த நாயகி

 மயில் வாகணன்

 துவாரபாலகர்கள்
 கன்னிமூல கணபதி
 கருவறைக்கு பின்னால் உள்ள மண்டபம்
 சிவன் கோயிலில் உள்ள அனுமன் விக்ரகம்
 ஸ்ரீ ஜெயதேவ் மகாரிஷி ஜீவசமாதி



 தெட்சிணாமூர்த்தி

 ஸ்தல வரலாற்றை குறிக்கும் சிலைகள்






 பாலசுப்ரமண்யர் வள்ளி,தெய்வானையுடன் உள்ள காட்சி ( ஆனால் சுப்பிரமண்யர் பாலகனாக இல்லை)
   தேனிமாவட்டம் பெரியகுளத்தில்''வராகநதி''தென்கரையில் அமைந்திருக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இவ்வாலயத்தில், பாலசுப்பிரமணியர் ஆறு முகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருகில் லிங்கவடிவில் இராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் வீற்று அருள்பாலிக்கின்றனர். ராஜேந்திரசோழமன்னன் கட்டியதால் இக்கோயில், அப்பகுதியில் பேச்சு வழக்கில் பெரியகோயில் என்றும் அழைக்கப்படுகிற்து,முருகனுக்கு நேர் எதிரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மரணத்தை வென்ற மிருத்யுஞ்சரின் சன்னதி உள்ளது, கோயில் அருகே ஓடும் வராகநதியின் கரையில் ஆண் மருதமரமும், பெண் மருதமரமும் உள்ளன,இது மிகவும் அபூர்வமான அமைப்பாக கருதபடுகிறது, சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான மரங்கள், இங்குள்ள ஆண், பெண் மருதமரங்களின் நடுவே ஓடும் வராக நதியில் குளித்துவிட்டு சென்றால், திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தை  இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு சினிமா படங்கள் நிறைய எடுக்கப்பட்டு வருகின்றன, அதற்க்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது , இவ்வளவு சிறப்புகள் பெற்ற கோயில் தற்பொழுது சரியான பராமரிப்பு இல்லாமல் சிதைந்து வருகிறது, மேலும் இங்கு  ஆற்றில் ''ஈமசடங்குகள்'' நடப்பதால் மிகவும் அசுத்தமடைந்து வருகிறது.

தட்சிணாமூர்த்தி-வேதபுரி


       ஞானக் கடவுள் தட்சிணாமூர்த்திக்குத் தனிக் கோயில் தேனி ''முல்லைநகர்'' அருகே உள்ள வேதபுரியில் அமைந் துள்ளது. இத்தலம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மூலவர் தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறை விமானத்தில் 5 கலசங்கள் வைக்கபட்டுள்ளது, காலை நேரத்தில் மட்டுமே தேங்காய் உடைக்கலாம். கேந்திப்பூ, கோழிக் கொண்டைப்பூ போன்றவைகளை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது. கொண்டைக் கடலைகளை மாலையாக கட்டி கொண்டு வருவதைத் தவிர்த்து பாக்கெட்டுகளாக கொண்டு வர வேண்டும் என கூறுகிறார்கள். சுவாமிக்கு மாலை அணிவிக்க விரும்புபவர்கள் வில்வ மாலை கொண்டு வரலாம்.கற்பூரம் ஏற்றுவதும் இக்கோயிலில் தடை செய்யப் பட்டுள்ளது.

 பக்தர்கள் தரிசணம் செய்யும் மகா மண்டபத்தின் நீளம் 108 அடி, அகலம் 54 அடியாக உள்ளது. பக்தர்கள் மண்டபத்தின் எப்பகுதியில் இருந்தும் சுவாமியை நன்றாக தரிசிக்கும் வகையில் மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூலவரையும், விமானத்தையும் ஒன்றாக தரிசிக்க முடியும். கோயிலின் நுழைவு வாசலிலிருந்து கூட மூலவரை நன்றாக தரிசிக்க முடியும்.இங்கு வேத பாடசாலை உள்ள்து,
இங்கு கோவிலை வலம் வருவதற்க்கு தனியாக பாதை அமைக்கபட்டுள்ளது, கோவிலை வலம் வருவது இங்கு சிறப்பு வழிபாட்டு முறையாக உள்ளது

பயணிகளுக்கு

 சிறிய டீக்கடை பெஞ்சுகள் ( பழைய சைக்கிள் ''ரிம்''மில் செய்யபட்டவை)
பயணிகளுக்கு ராஜஸ்தானிய உடைகளை அணிவித்து போட்டோ எடுத்து கொடுத்து கட்டணம் வசூலித்துக்கொள்கிறார்கள்

மரங்கள்





தமிழகத்தில் காணப்படாத மரங்கள்

ஜெய்பூர் - பிங்க் சிட்டி


 ஜெய்பூரில் உள்ள மிருககாட்சிசாலை






ஜந்தர் மந்தர் ஜெய்பூர்









 வானவியல் கருவிகள் அமைந்துள்ள இடம்






 ஜந்தர் மந்தர் என்றழைக்கப்படும் இந்த வானியல் ஆராய்ச்சிக்கூடம் மஹாராஜா இரண்டாம் சவாய் ஜெய் சிங் அவர்களால் நிர்மாணிக்கப் பட்டுள்ளது .  இந்த வானியல் ஆராய்ச்சி கூடம் யுனெஸ்கோ சர்வதேச அமைப்பினால் உலகப்பண்பாட்டு சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், “முகலாய ஆட்சியின் இறுதிக்காலத்தில் வானசாஸ்திர மற்றும் கிரகங்கள் குறித்த அறிவோடு பிரசித்தி பெற்றிருந்த ஒரு ராஜவம்சத்தின் படைப்பு என்ற பெருமைக்குரிய விளக்கமும் தரப்பட்டிருக்கிறது.


இந்த வானியல் கூடமானது அழகான பளிங்குக்கற்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருக்கும் ‘ராம் யந்திரா’ எனும் நுணுக்கம் வாய்ந்த கருவி வானசாஸ்திர அறிவுக்கு சான்றாக திகழ்கிறது.
இது நில உயர அளவுகளை கணக்கிடப் பயன்படுவதாகும். இது தவிர, துருவம், உத்திராயணம் , தட்சிணயனம் , பற்றி அறிந்துகொள்ள அமைக்கப்பட்ட இடமாகும், இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள  கருவிகளை  பயணிகள் காணலாம்.


 மன்னர்கள் கோவில் கட்டுவது, கோட்டை கட்டுவது என்று நின்றுவிடாமல் வானவியல் சாஸ்திரத்திற்க்காகவும் செலவு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது,