ராஜேந்திர சோழீஸ்வரர்
அறம் வளர்த்த நாயகி
மயில் வாகணன்
துவாரபாலகர்கள்
கன்னிமூல கணபதி
கருவறைக்கு பின்னால் உள்ள மண்டபம்
சிவன் கோயிலில் உள்ள அனுமன் விக்ரகம்
ஸ்ரீ ஜெயதேவ் மகாரிஷி ஜீவசமாதி
தெட்சிணாமூர்த்தி
ஸ்தல வரலாற்றை குறிக்கும் சிலைகள்
பாலசுப்ரமண்யர் வள்ளி,தெய்வானையுடன் உள்ள காட்சி ( ஆனால் சுப்பிரமண்யர் பாலகனாக இல்லை)
தேனிமாவட்டம் பெரியகுளத்தில்''வராகநதி''தென்கரையில் அமைந்திருக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இவ்வாலயத்தில், பாலசுப்பிரமணியர் ஆறு முகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருகில் லிங்கவடிவில் இராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் வீற்று அருள்பாலிக்கின்றனர். ராஜேந்திரசோழமன்னன் கட்டியதால் இக்கோயில், அப்பகுதியில் பேச்சு வழக்கில் பெரியகோயில் என்றும் அழைக்கப்படுகிற்து,முருகனுக்கு நேர் எதிரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மரணத்தை வென்ற மிருத்யுஞ்சரின் சன்னதி உள்ளது, கோயில்
அருகே ஓடும் வராகநதியின் கரையில் ஆண் மருதமரமும், பெண்
மருதமரமும் உள்ளன,இது மிகவும் அபூர்வமான அமைப்பாக கருதபடுகிறது, சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான மரங்கள், இங்குள்ள ஆண், பெண் மருதமரங்களின் நடுவே ஓடும் வராக
நதியில் குளித்துவிட்டு சென்றால், திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும், சகல ஐஸ்வர்யங்களும்
கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு சினிமா படங்கள் நிறைய எடுக்கப்பட்டு வருகின்றன, அதற்க்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது , இவ்வளவு சிறப்புகள் பெற்ற கோயில் தற்பொழுது சரியான பராமரிப்பு இல்லாமல் சிதைந்து வருகிறது, மேலும் இங்கு ஆற்றில் ''ஈமசடங்குகள்'' நடப்பதால் மிகவும் அசுத்தமடைந்து வருகிறது.
அறம் வளர்த்த நாயகி
துவாரபாலகர்கள்
கன்னிமூல கணபதி
கருவறைக்கு பின்னால் உள்ள மண்டபம்
சிவன் கோயிலில் உள்ள அனுமன் விக்ரகம்
ஸ்ரீ ஜெயதேவ் மகாரிஷி ஜீவசமாதி
தெட்சிணாமூர்த்தி
ஸ்தல வரலாற்றை குறிக்கும் சிலைகள்
பாலசுப்ரமண்யர் வள்ளி,தெய்வானையுடன் உள்ள காட்சி ( ஆனால் சுப்பிரமண்யர் பாலகனாக இல்லை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக