ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ளது இந்த வானுயர்ந்த காற்று மாளிகை ஐந்து அடுக்கு மாளிகை, இந்த
மாளிகை, ராஜஸ்தானிய கட்டிடக் கலையின் அற்புத சாட்சியாக காட்சியளிக்கிறது.
ஜெய்பூர் அரண்மனையின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த மாளிகையில் இருந்து
பார்த்தால் அரண்மனையைச் சுற்றியுள்ள சாலைகளையும், ஜெய்பூர் நகரையும் நன்கு
பார்க்க முடியும். மகாராஜா சவாய் பிரதாப் சிங், இந்த மாளிகையை கட்டியதே
அதற்குத் தான். ஆம், அரச குடும்பத்து பெண்கள் இந்த மாளிகையில் இருந்தபடியே
யார் கண்ணிலும் படாமல், ராஜ வீதிகளில் வரும் ஊர்வலங்களையும், நடைபெறும்
நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்க வேண்டும் என்று தான் அவர் இந்த காற்று
மாளிகையை கட்டினார்.காற்று மாளிகையின் முன்
நின்று பார்த்தால் ஏதோ அலங்கரிக்கப்பட்ட திரைச்சீலை தொங்க விடப்பட்டதை
போலத் தான் இருக்கிறது. பிரமிடு வடிவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாளிகையில்
ஐந்து தளங்களிலும் சேர்த்து அடுக்கடுக்காக 953 சாளரங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய ஜன்னல் வைக்கப்பட்டுள்ளது. இது
தவிர ஒவ்வொரு சாளரத்தை சுற்றிலும் பால்கனியும், உச்சியில் நுணுக்கமான
வேலைப்பாடுகள் கொண்ட அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறிய
ஜன்னல் வழியாக உட்புகுந்து வரும்போது, வெப்பக் காற்றும் குளிர் காற்றாக
மாறிவிடும் வகையில் இந்த ஜன்னல்களை வடிவமைத்துள்ளனர். இளஞ்சிவப்பு நிறக் கற்களைக் கொண்டு இந்த காற்று மாளிகையை
கட்டியிருப்பதால் தூரத்தில் இருந்து பார்க்கும் போது, வானில் சிவப்புத்
திரைச்சீலை தொங்குவது போல காட்சியளிக்கிறது. ஜெய்பூர் அரண்மனைக்குள்
நுழைந்து வந்தால் இந்த மாளிகையை அடையலாம். இதன் மேல் மாடிகளுக்கு செல்ல
படிகள் எதுவும் இல்லை, வெறும் சரிவான பாதை மட்டுமே உள்ளது. அவற்றின் மூலம்
தான் மேல் தளங்களுக்கு செல்ல வேண்டும். இந்த மாளிகையின்
சாளரங்கள் வழியாக ஜெய்பூர் நகரின் அற்புதக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.
இங்குள்ள அலங்கார சாளரங்கள் மூலம் சூரிய உதயத்தைக் காண ஏராளமான சுற்றுலாப்
பயணிகள் இங்கு வருகின்றனர். இந்த
காற்று மாளிகை தற்போது ராஜஸ்தான் மாநில தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின்
பராமரிப்பில் உள்ளது.
பக்கங்கள்
- முகப்பு
- கனவு
- இந்திய பழைய நாணயங்கள்
- மனம்
- வெற்றி உங்கள் கற்பனையில்
- உடனடியாக
- வெல்பவன்
- வெற்றி ரகசியம்
- சிந்தித்துபேசு
- கடவுளே !!!
- கடமை
- வென்று காட்டுவோம்
- பேசு
- பரிசு
- வழி தேடு
- தயாராகு
- எதிரி
- வாழ்க்கை
- எதிர்(ரி)காலம்
- பிரச்சனைகள் தீர
- கீதையின் சாரம்
- வாழ்க்கை வெற்றி
- நான்-கடவுள்
- வெற்றிக்கு குறுக்கு வழி
- முதல் வேலைக்காரன்
- உபதேசம்
- விட்டுக் கொடுக்காதீர்கள்
- இறையருள்
- எச்சரிக்கை
- பழக்கம்
- தாய்- தந்தை
- மயானம்-தியானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக