ஞானக் கடவுள் தட்சிணாமூர்த்திக்குத் தனிக் கோயில் தேனி ''முல்லைநகர்'' அருகே உள்ள வேதபுரியில் அமைந் துள்ளது. இத்தலம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மூலவர் தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறை விமானத்தில் 5 கலசங்கள் வைக்கபட்டுள்ளது, காலை நேரத்தில் மட்டுமே தேங்காய் உடைக்கலாம். கேந்திப்பூ, கோழிக் கொண்டைப்பூ போன்றவைகளை பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது. கொண்டைக் கடலைகளை மாலையாக கட்டி கொண்டு வருவதைத் தவிர்த்து பாக்கெட்டுகளாக கொண்டு வர வேண்டும் என கூறுகிறார்கள். சுவாமிக்கு மாலை அணிவிக்க விரும்புபவர்கள் வில்வ மாலை கொண்டு வரலாம்.கற்பூரம் ஏற்றுவதும் இக்கோயிலில் தடை செய்யப் பட்டுள்ளது.
பக்தர்கள் தரிசணம் செய்யும் மகா மண்டபத்தின் நீளம் 108 அடி, அகலம் 54 அடியாக உள்ளது. பக்தர்கள் மண்டபத்தின் எப்பகுதியில் இருந்தும் சுவாமியை நன்றாக தரிசிக்கும் வகையில் மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூலவரையும், விமானத்தையும் ஒன்றாக தரிசிக்க முடியும். கோயிலின் நுழைவு வாசலிலிருந்து கூட மூலவரை நன்றாக தரிசிக்க முடியும்.இங்கு வேத பாடசாலை உள்ள்து,
இங்கு கோவிலை வலம் வருவதற்க்கு தனியாக பாதை அமைக்கபட்டுள்ளது, கோவிலை வலம் வருவது இங்கு சிறப்பு வழிபாட்டு முறையாக உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக