ஜந்தர் மந்தர் ஜெய்பூர்









 வானவியல் கருவிகள் அமைந்துள்ள இடம்






 ஜந்தர் மந்தர் என்றழைக்கப்படும் இந்த வானியல் ஆராய்ச்சிக்கூடம் மஹாராஜா இரண்டாம் சவாய் ஜெய் சிங் அவர்களால் நிர்மாணிக்கப் பட்டுள்ளது .  இந்த வானியல் ஆராய்ச்சி கூடம் யுனெஸ்கோ சர்வதேச அமைப்பினால் உலகப்பண்பாட்டு சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், “முகலாய ஆட்சியின் இறுதிக்காலத்தில் வானசாஸ்திர மற்றும் கிரகங்கள் குறித்த அறிவோடு பிரசித்தி பெற்றிருந்த ஒரு ராஜவம்சத்தின் படைப்பு என்ற பெருமைக்குரிய விளக்கமும் தரப்பட்டிருக்கிறது.


இந்த வானியல் கூடமானது அழகான பளிங்குக்கற்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருக்கும் ‘ராம் யந்திரா’ எனும் நுணுக்கம் வாய்ந்த கருவி வானசாஸ்திர அறிவுக்கு சான்றாக திகழ்கிறது.
இது நில உயர அளவுகளை கணக்கிடப் பயன்படுவதாகும். இது தவிர, துருவம், உத்திராயணம் , தட்சிணயனம் , பற்றி அறிந்துகொள்ள அமைக்கப்பட்ட இடமாகும், இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள  கருவிகளை  பயணிகள் காணலாம்.


 மன்னர்கள் கோவில் கட்டுவது, கோட்டை கட்டுவது என்று நின்றுவிடாமல் வானவியல் சாஸ்திரத்திற்க்காகவும் செலவு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது,



கருத்துகள் இல்லை: