உதய்பூர் சஜ்ஜன் கர்ஹ் கோட்டை


























மகாராணா பிரதாப் சிங் சமாதி - மோடி மக்ரி-உதய்பூர்















மகாராணா பிரதாப் சிங் 4 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகளுக்கு, மூத்தவராக, கும்பால்கர் என்ற இடத்தில் [தற்போது ராஜஸ்தானில் ராஜச்மன்ட் ஜில்லாவில் உள்ளது] பிரதாப் பிறந்தார், அவரது பெற்றோர்கள் மஹாராணா உதய்சிங் II மற்றும் சன்கார மகாராணி ஜவந்தபாய் ஆவார்கள்.மஹா ராணா பிரதாப் வேட்டையாடும் பொழுது ஏற்பட்ட விபத்தால் மரணம் அடைந்தார். மஹாராணா பிரதாப்பின் வெண்கலச் சிலை மற்றும் அவரது விருப்பமான, உண்மையான புரவி, வீரமாகப் போராடி தனது எஜமானைக் காத்து வந்ததாலும் உயிர்பிரியும் வரை உடன் இருந்ததாலும், மோடி மக்ரியின் உச்சியில் (முத்து மலை) பதெஹ் சாகரில் இந்த கம்பீரமான குதிரைச் சிலையும் உள்ளது.  மக்கள் அந்தக் குன்றின்மீது ஏறிச் சென்று மஹா ராணா பிரதாபிற்கும் மற்றும் அவரது உண்மையான புரவி 'சேடக்'கிற்கும் அது ஹல்டிகாடி யுத்தத்தில் கொல்லப் பட்டதால் அதற்கும் சேர்த்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  வட மேற்கு  இந்தியாவில் அமைந்திருந்த மேவார் மாகாணத்தின் இந்து  அரசர்
இவர் ராஜபுத்திரர்களின் சூர்யவன்ஷி குலத்தில் சிசோதியா என்கின்ற பிரிவை சார்ந்தவர். ராஜபுத்திரர்கள் தொன்று தொட்டு போற்றிவரும் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுய மரியாதை ஆகிய அருங்குணங்களுக்கு ஒரு  சிறந்த எடுத்துக் காட்டாக மகாராணா பிரதாப் சிங் விளங்கினார்.

சிட்டி பேலஸ், உதய்பூர்























































சிட்டி பேலஸ் அரண்மனை உதய்பூரிலுள்ள மாளிகைகளில் ஒன்றாகும். இது ராஜஸ்தான் மாநிலத்திலேயே மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. மஹாராணா உதய்மிர்ஸா சிங் அவர்களால் கட்டப்பட்டது. இது பிச்சோலா ஏரிக்கரையில் அமைந்துள்ளது. சிட்டி பேலஸ் அரண்மனையின் கட்டமைப்பு முகலாய மற்றும் ராஜஸ்தானிய கட்டிடக்கலை பாணியின்  கலவையான அம்சங்களை கொண்டுள்ளது. ஒரு மலைக்குன்றின் உச்சியின் கட்டப்பட்டுள்ளதால்  மேலிருந்து கீழாக இந்த வளாகத்தில் பல  கோபுரங்கள், முற்றங்கள், வழிநடைகள்,பாதுகாப்பை முண்ணிட்டு இரண்டடி அகலமே கொண்டுள்ள நடைபாதைகளும், அறைகள், அரங்குகள், தூண்கள் மற்றும் தோட்டங்கள் அனைத்தும் அரண்மனையின் அழகை கூட்டுகின்றன.மேலும், இந்த அரண்மனைக்கு பல நுழைவாயில்களும் உள்ளன. இதற்கு மிக அருகிலேயே யானைச்சண்டைகள் நடைபெறும் ஒரு மைதானம் ஒன்றும் அமைந்துள்ளது. இங்கு மன்னர்கள் தங்கள் எடைக்கு எடை பொன் மற்றும் வெள்ளியை நிறுத்து அவற்றை ஏழை குடிமக்களுக்கு வழங்கியுள்ளனர்.புராதன நாற்காலிகள் மற்றும் மரசாமான்கள். அழகிய ஓவியங்கள், கண்ணாடி மற்றும் ஆபரண வடிவமைப்புகள் இந்த அரண்மனை உட்பகுதியின்    அழகை கூட்டுகின்றன. பீங்கானில் உருவாக்கப்பட்ட அபாரமான சிலைகள் உள்ளன. ராதா கிருஷ்ணா வரலாற்றை குறிக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அழகிய வெள்ளி பாத்திரங்கள் , ஒப்பனை சாமான்கள், விசிறிகள், பூசை சாமான்கள் நிறைந்துள்ளன.