உமைத் பவன் அரண்மனை ஜோத்பூர்

 காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இந்த அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது. இந்த அழகிய அரண்மனை இந்தோ-காலனிய கலை நுணுக்கத்திற்கு உதாரணமாக திகழ்கிறது.

 உமைத் பவன் அரண்மனை இந்தியாவின் அதிக கம்பீரமான அரண்மனைகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அரண்மனைகள் பலவற்றுள் மிகவும் அண்மைகாலத்தில் கட்டப்பட்டதாகவும் இருக்கிறது.பஞ்ச காலத்தின் போது மக்களுக்கு பொது நிவாரணம் கிடைக்க பணியாளர் செயல்திட்டமாக இந்த அரண்மனைக் கட்டப்பட்டதாகும். இது சிட்டார் பேலஸ் (அரண்மனை) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனையைக் கட்டிய மகாராஜா உமைத் சிங்கின் பெயரால் இந்த அரண்மனை உமைத்பவன் எனவும் அழைக்கப்படுகிறது.
 அழகாக செதுக்கப்பட்ட மஞ்சள்கற்கள் இக்கட்டிடத்திற்கு அழகைச் சேர்க்கின்றன

 இந்த அரண்மனையானது அரசக் குடியிருப்பு. பாரம்பரியமானத் தங்கும் விடுதி மற்றும் அருங்காட்சியகம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
மின்விசிறி வேகம்கூட்டி ( அதாங்க ரெகுலேட்டர்)






இந்த அரண்மனை அரசரின் அந்தபுரமாளிகையாக திகழ்ந்துள்ளது
 உமைத் பவன் அரண்மனை அருங்காட்சியகத்தில் ராஜ வம்சத்தினர் பயன்படுத்திய பலவகையான அரிய கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மாதிரி ஏரோப்பிளேன்கள், ஆயுதங்கள், பீங்கான் பொருட்கள், பழமையான கடிகாரங்கள், பாப் கைக்கடிகாரங்கள், கரண்டி வகைகள், அபூர்வ கற்கள், புகைப்படங்கள் மற்றும் வேட்டைச்சின்னங்கள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க அரிய பொருட்களாகும்.
இந்தியாவில் இந்தி தெரியாவிட்டால் ஊமைமாதிரி ஆகிவிடவேண்டும் போலிருக்கிறது. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் ஆங்கிலம் கூட மிக குறைவுதான். இந்தியர்களுக்கான கட்டணத்தொகையை குறிக்க இந்தி மட்டுமே பயண்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: