ஜஸ்வந்த் தாடா ஜோத்பூர் Jaswant Thada

 ஜஸ்வந்த் தாடா என்பது ஜோத்பூரில்  உள்ள ஒரு கட்டடக்கலை நிறைந்த இடமாகும். இது 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் ஜஸ்வந்த் சிங் மகாராஜாவின் நினைவாக கட்டப்பட்ட வெள்ளை சலவைக்கல் நினைவாலயமாகும். இந்த நினைவுச்சின்னம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிற்பப் படைப்புகளுடன் சலவைக்கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இதன மேல் கூரை பருமன் குறைந்த மெல்லிய கற்களால் நன்கு பளபளப்பாக்கப்பட்டு கட்டப்பட்டு உள்ளன. அதனால் சூர்யோதயத்தின் போது அதன் மேற்பரப்பு முழுவதும் ஒளி ஊடுருவி மிதமான அழகொளியை பிரதிபலிக்கின்றன. இந்த நினைவுச்சின்னத்தினுள் இரண்டு சமாதிகளும் உள்ளன.இங்கிருந்து பார்த்தால் மெஹ்ரன்கார்ஹ் கோட்டை மிகவும் அருகில் உள்ளது. நினைவிடத்தை சுற்றிலும் மிகவும் வனப்பான பூந்தோட்டம் உள்ளது.










கருத்துகள் இல்லை: