இந்தியாவில் உள்ள சமணக் கோயில்களில் பிரம்மாண்டமானது ரணக்பூரில் உள்ள ஆதிநாதர் ஆலயம். மைய கோவிலை சுற்றி இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களுக்கும் சிறிய
கோயில் உள்ளது. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு கோபுரம் இருக்கிறது. . இந்தியாவின் மிகப்பெரிய
ஆலயங்களில் இதுவும் ஒன்று இது ஜைன சமயத்தவர்களின் மிகப்பெரிய புண்ணிய திருதலமாக புகழ்பெற்று
விளங்கும் ஜெயின் கோவில். உள்ளே சென்றால் வேலைபாடுகள் நிரம்பிய தூண்கள், மெய் மறக்க செய்யும் ஈர்ப்பு, அதன் பிரமாண்டம் நம் கழுத்தைச் சுளுக்க வைக்கும் உயரம். முற்றிலும் சலவைக்கல்லால்
ஆனது. நான்கு பக்கமும் வாசல் உள்ள கருவறைக்குள் ஆதிநாதர் அமர்ந்திருக்கிறார். பெரிய
கண்கள் கொண்ட சலவைக்கல் சிலை. கண்களுக்கு மட்டும் தனியாக கண்ணாடி போன்ற அமைப்பு என அதன் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்,கோயிலுக்கு
நான்கு வாசல்கள் உள்ளன கோவிலை சுற்றிலும் தங்குவதற்கு அறைகள் வாடகைக்கு கிடைக்கின்றன. இங்கு தங்குவதற்கு இரட்டை கட்டில் மெத்தை வசதியுடன் கூடிய குளிக்க சுடு தண்ணி என வசதிகள் நிரம்பிய அறைக்கு ரூ 250/.மட்டுமே வாங்குகிறார்கள்.( அந்த பகுதியில் மற்ற இடங்களில் ரூ 2500/.) ஆதிநாத் கோயிலை படம் பிடிக்க அனுமதிக்கவில்லை எனவே அதன் அருகில் கோயில் வளாகத்திற்குள் உள்ள கோவிலின் படம் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது.மேலும் கோவிலுக்குள் கைபை, செல்போன், பெல்ட் போன்ற பொருள்களுக்கும் அனுமதியில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக