சிட்டி பேலஸ், உதய்பூர்























































சிட்டி பேலஸ் அரண்மனை உதய்பூரிலுள்ள மாளிகைகளில் ஒன்றாகும். இது ராஜஸ்தான் மாநிலத்திலேயே மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. மஹாராணா உதய்மிர்ஸா சிங் அவர்களால் கட்டப்பட்டது. இது பிச்சோலா ஏரிக்கரையில் அமைந்துள்ளது. சிட்டி பேலஸ் அரண்மனையின் கட்டமைப்பு முகலாய மற்றும் ராஜஸ்தானிய கட்டிடக்கலை பாணியின்  கலவையான அம்சங்களை கொண்டுள்ளது. ஒரு மலைக்குன்றின் உச்சியின் கட்டப்பட்டுள்ளதால்  மேலிருந்து கீழாக இந்த வளாகத்தில் பல  கோபுரங்கள், முற்றங்கள், வழிநடைகள்,பாதுகாப்பை முண்ணிட்டு இரண்டடி அகலமே கொண்டுள்ள நடைபாதைகளும், அறைகள், அரங்குகள், தூண்கள் மற்றும் தோட்டங்கள் அனைத்தும் அரண்மனையின் அழகை கூட்டுகின்றன.மேலும், இந்த அரண்மனைக்கு பல நுழைவாயில்களும் உள்ளன. இதற்கு மிக அருகிலேயே யானைச்சண்டைகள் நடைபெறும் ஒரு மைதானம் ஒன்றும் அமைந்துள்ளது. இங்கு மன்னர்கள் தங்கள் எடைக்கு எடை பொன் மற்றும் வெள்ளியை நிறுத்து அவற்றை ஏழை குடிமக்களுக்கு வழங்கியுள்ளனர்.புராதன நாற்காலிகள் மற்றும் மரசாமான்கள். அழகிய ஓவியங்கள், கண்ணாடி மற்றும் ஆபரண வடிவமைப்புகள் இந்த அரண்மனை உட்பகுதியின்    அழகை கூட்டுகின்றன. பீங்கானில் உருவாக்கப்பட்ட அபாரமான சிலைகள் உள்ளன. ராதா கிருஷ்ணா வரலாற்றை குறிக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அழகிய வெள்ளி பாத்திரங்கள் , ஒப்பனை சாமான்கள், விசிறிகள், பூசை சாமான்கள் நிறைந்துள்ளன. 

கருத்துகள் இல்லை: